TNPSC Thervupettagam

வியாழன் கோளின் குறுங்கோள்கள்

April 21 , 2023 586 days 282 0
  • நாசாவின் லூசி விண்கலம் ஆனது, வியாழனின் குறுங்கோள்களை முதன்முறையாகக் கண்டறிந்துள்ளது.
  • நாசாவின் ஆய்வுக் கருவி மூலம் ட்ரோஜான்கள் எனப்படும் நான்கு குறுங்கோள்களின் தொலை தூர விண்வெளிப் படங்களைப் பதிவு செய்ய முடிந்தது.
  • மார்ச் 25 முதல் 27 ஆம் தேதி வரை நான்கு ட்ரோஜன் குறுங்கோள்கள் படம் பிடிக்கப் பட்டன.
  • முதன்முறையாகப் படம் பிடிக்கப்பட்ட இந்த நான்கு குறுங்கோள்கள் யூரிபேட்ஸ், பாலிமெல், லியூகஸ் மற்றும் ஓரஸ் என்று அழைக்கப் படுகின்றன.
  • அவை அனைத்தும் சூரியனைச் சுற்றியுள்ள வியாழனின் சுற்றுப் பாதையைப் பின்பற்றி சுற்றி வரும் இரண்டு பெரிய குழுமங்களின் ஒரு பகுதியாகும்.
  • இந்தப் படங்களை எடுப்பதற்காக, லூசி விண்கலமானது L'LORRI என்ற கருவியினை (லூசி தொலைதூர வரம்புடைய ஆய்வுப் படக் கருவி - Lucy Long Range Reconnaissance Imager) பயன்படுத்தியது.
  • லூசி வியாழனின் குறுங்கோள்களிலிருந்து 530 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
  • 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் விண்ணில் ஏவப்பட்ட இந்த விண்கலம் ஆனது, 2027 மற்றும் 2028 ஆம் ஆண்டுகளில் அதன் இலக்குகளான குறுங்கோள்களைச் சென்று அடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்