வியாழன் கோளின் யூரோபா துணைக்கோளின் பனிசூழ் பகுதிக்கு அடியில் உள்ள பெருங்கடலில் கார்பன் டை ஆக்சைடு வாயு இருப்பதாக ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் தரவுகள் மூலம் கண்டறியப்பட்டது.
தாரா ரெஜியோ எனப்படும் 1,800 கிலோமீட்டர் (1,120 மைல்) பரப்பில் அதிக CO2 இருந்தது.
யூரோபா துணைக்கோளின் பனிசூழ் பகுதிக்கு கீழே பல கிலோமீட்டர்கள் ஆழத்திலான உப்பு நீர் சூழ்ந்த ஒரு பெரிய கடல் இருப்பதாக அறிவியலாளர்கள் நம்புகின்றனர்.
ஆனால் அது கீழே உள்ள கடலில் இருந்து எழுந்ததா என்பது ஒரு கேள்வியாகவே உள்ளது.