வியாழன் கோளில் கண்டறியப்பட்ட கரிய நீள்வட்ட வடிவங்கள்
December 16 , 2024 6 days 78 0
வானியலாளர்கள் வியாழன் கிரகத்தின் துருவங்களில், பெருஞ்சிவப்புப் பகுதியினைப் போலவே பூமியின் அளவிலான கரிய நீள்வட்ட வடிவங்கள் இருப்பதைக் கண்டறிந்து உள்ளனர்.
அவை பொதுவாக அந்தக் கிரகத்தின் துருவ மின்னொளி மண்டலங்களுக்குக் கீழே காணப் படுகின்றன.
2015 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடையிலான கண்காணிப்புகள், சுமார் 75% படங்களில் தோன்றுவதால் இந்த சில அம்சங்கள் தென் துருவத்தில் அதிகம் காணப் படுவதாகவும் கூறப்படுகின்றது.