இஸ்ரோ நிறுவனமானது ககன்யான் திட்டத்திற்காக ஒரு சோதனை முயற்சியாக “வியோம் மித்ரா” என்று அழைக்கப்படும் ஒரு அரை மனித ரோபோவை விண்வெளிக்கு அனுப்ப உள்ளது.
வியோம் மித்ரா என்றால் விண்வெளித் தோழி என்று பொருள்படும்.
இது 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி III விண்கலத்தின் மூலம் ஆளில்லா விமானப் பயணம் மூலமாகச் செலுத்தப்பட இருக்கின்றது. இது 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இரண்டாவது ஆளில்லா விமானப் பயணம் மூலமாகச் செலுத்தப்பட இருக்கின்றது.
இந்த அரை மனித ரோபோவானது இந்தி மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் பேசும் திறன் கொண்டது.