TNPSC Thervupettagam

விராட் கோலி – 500 சர்வதேசப் போட்டி

July 24 , 2023 360 days 257 0
  • இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலி 500 சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய 10வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
  • இந்த பிரத்தியேகப் பட்டியலில் இணைந்த நான்காவது இந்தியர் கோலி ஆவார் என்ற நிலையில், இந்தப் பட்டியலில் இடம் பெற்ற மற்ற மூவர் சச்சின் டெண்டுல்கர் (664), M.S. தோனி (538) மற்றும் ராகுல் டிராவிட் (509) ஆகியோர் ஆவர்.
  • சர்வதேசக் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையையும் கோலி பெற்றுள்ளார்.
  • தனது 500வது சர்வதேசப் போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் என்றப் பெருமையை இவர் பெற்றுள்ளார்.
  • கோலி 274 ஒருநாள் போட்டிகள் மற்றும் 115 டி20 போட்டிகள் மற்றும் 111 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி சார்பில் பங்கேற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்