TNPSC Thervupettagam

விரிவான உத்திசார் கூட்டாண்மை ஒப்பந்தம் 2025

February 19 , 2025 4 days 18 0
  • ரஷ்ய நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஆகியோர் மாபெரும் கூட்டுறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
  • இந்த விரிவான உத்திசார் கூட்டாண்மை ஒப்பந்தம் ஆனது, வர்த்தகம் மற்றும் ராணுவ ஒத்துழைப்பு முதல் அறிவியல், கல்வி மற்றும் கலாச்சாரம் வரையிலான அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கியதாயாகும்.
  • 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், புதின் தனது படைப் பிரிவுகளை உக்ரைனுக்கு அனுப்பியதையடுத்து ஈரானுடனான ரஷ்யாவின் உறவுகள் அதிகரித்தது.
  • 1991 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, கடந்த கால உறவுகளில் சிக்கலைக் கொண்டிருந்த ரஷ்யாவும், ஈரானும் நல்லுறவை வளர்த்துக் கொண்டன.
  • 2013 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஈரானின் முதல் அணுமின் நிலையத்தை ரஷ்யா கட்டமைத்தது என்பதோடு மேலும் இரண்டு அணு உலைகளையும் அது உருவாக்கி வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்