TNPSC Thervupettagam

விரிவான தொலைத்தொடர்பு மேம்பாட்டுத் திட்டம்

May 25 , 2018 2380 days 676 0
  • மத்திய அமைச்சரவை வடகிழக்கு மண்டலத்தின் மேகாலயா மாநிலத்தில் கைபேசி சேவைகளை மேம்படுத்துவதற்காக விரிவான தொலைத் தொடர்பு மேம்பாட்டுத் திட்டத்தின் செயலாக்கத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.
  • இந்தத் திட்டம் அடையாளம் காணப்பட்ட கைபேசி சேவைகள் பெறாத பகுதிகளில் 2G மற்றும் 4G கைபேசி அடைவிற்கான விதிகளைக் கொண்டுள்ளதோடு, மேகாலயாவின் தேசிய நெடுஞ்சாலைகள் முழுவதும் தடையற்ற கைபேசி சேவையை வழங்கும்.
  • இத்திட்டத்திற்கு உலகளாவிய சேவை உதவி நிதியத்தினால் (Universal Service Obligation Fund - USOF) நிதியளிக்கப்படுகிறது.
  • USOF ஆனது ஊரகப் பகுதிகளில் தொலைத் தொடர்பு வசதியை மேம்படுத்தும் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த நிதியத்திற்கான நிதியானது, உலகளாவிய அணுகல் வசூலில் (Universal Access Levy - UAL) இருந்து வருகிறது. தொலைத் தொடர்பு நிறுவனங்களின் பல்வேறு உரிமக் கட்டணங்களுக்கு அவர்கள் மீது விதிக்கப்படும் வரியின் குறிப்பிட்ட சதவீத பணமே UAL ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்