TNPSC Thervupettagam

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள் – தமிழ்நாடு

February 17 , 2019 2109 days 786 0
  • இந்தியாவிலேயே தமிழ்நாட்டைச் சிறந்த மாநிலமாக இந்தியா டுடே பத்திரிகை தேர்வு செய்து 4 விருதுகளை வழங்கியது. அந்தப் பிரிவுகளாவன
    • ஒட்டுமொத்தச் செயல்பாடு,
    • சட்டம் ஒழுங்கு
    • மேம்படுத்தப்பட்ட சட்ட ஒழுங்கு
    • சுற்றுலா
ஆகியவையாகும்
  • கடந்த ஐந்து வருடங்களில் 4 முறை உணவு தானிய உற்பத்தி உயர்வுக்காக, இந்திய அரசின் உயர் விருதான கிருஷி கர்மான் விருது பெறப்பட்டது.
  • பெங்களூருவைச் சேர்ந்த பொது விவகாரங்கள் மையம் என்ற அமைப்பு சமூகப் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் 2018 ஆம் ஆண்டிற்கான தனது அறிக்கையில் ஆளுமையில் இரண்டாவது மாநிலமாகத் தமிழ்நாட்டைத் தேர்வு செய்தது.
  • சிறந்த மனித ஆற்றல், பலமான உட்கட்டமைப்பு வசதிகள், மிகைமின் உற்பத்தி மற்றும் இயற்கை வளங்களை தன்னகத்தே கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதால், இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்குகிறது.
  • தொழிற்சாலைகளின் எண்ணிக்கை மற்றும் பணியமர்த்தப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தமிழ்நாடு முதலிடம்.
  • தேசியப் பயன்பாட்டுப் பொருளாதார ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில், 2018 ஆம் ஆண்டில் தொழில் முதலீட்டிற்கு உகந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை இரண்டாவது இடத்தில் தரவரிசைப்படுத்தியுள்ளது.
  • பெரியகுளம் காவல் நிலையம் இந்தியாவிலேயே 8வது சிறந்த காவல் நிலையமாகத் தேர்வு.
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தினை திறமையாக செயல்படுத்தியதற்காக மத்திய அரசின் 5 விருதுகள்.
  • பொது விநியோகத் திட்டத்தினை முழுமையாக கணினி மயமாக்கியதற்காக விருது.
  • மரபுசாரா எரிசக்தித் துறைக்கான கட்டமைப்புகளைச் சிறப்பாக உருவாக்கியதற்காக மத்திய அரசின் விருது.
  • இறந்தவர்களின் உடல் உறுப்புகளைக் கொண்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் முதன்மை மாநிலத்திற்கான மத்திய அரசின் விருதை தமிழ்நாடு தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக பெற்று சாதனை.
  • தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பாக செயல்பட்டமைக்காக மத்திய அரசிடமிருந்து 11 விருதுகள்.
  • கோவை, ஈரோடு, மதுரை, திருச்சிராப்பள்ளி மாநகராட்சிகளுக்கு சிறந்த நிர்வாகத்திற்கான தேசிய மற்றும் பன்னாட்டு விருதுகள்.
  • திடக்கழிவு மேலாண்மைக்காக 2017 ஆம் ஆண்டிற்கான ஸ்காச் ப்ளாட்டினம் விருது.
  • தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு ஒருங்கிணைந்த மேலாண்மைத் தகவல் முறைக்கான மத்திய அரசின் விருது.
  • “பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்தியமைக்காக இந்தியாவின் முதன்மை மாநிலத்திற்கான விருது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்