TNPSC Thervupettagam

விரைவாக வெப்பமயமாகும் இந்தியப் பெருங்கடல்

May 3 , 2024 76 days 163 0
  • 1950-2020 ஆம் காலக் கட்டம் முதல், இந்தியப் பெருங்கடல் ஆனது 1.2 டிகிரி செல்சியஸ் வெப்பமடைந்தது என்பதோடு 2020 முதல் 2100 ஆம் ஆண்டு காலக் கட்டத்தில் மேலும் 1.7 டிகிரி செல்சியஸ் - 3.8 டிகிரி செல்சியஸ் அளவில் வெப்பமடையும் என்று பருவ நிலை மாதிரிகள் குறிப்பிடுகின்றன.
  • இது கடலில் காணப்படும் "கடல் வெப்ப அலைகள்" விரைவான புயல் உருவாக்கத்துடன் தொடர்பு கொண்டுள்ளது.
  • அவை ஆண்டிற்கு 20 நாட்கள் என்ற தற்போதைய சராசரியிலிருந்து 220-250 நாட்கள் என்ற அளவில் பத்து மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • இந்தியப் பெருங்கடலின் வெப்ப அளவானது, மேற்பரப்பில் இருந்து 2,000 மீட்டர் ஆழம் வரை அளவிடப்படுகிறது.
  • இது தற்போது பத்தாண்டுகளுக்கு 4.5 ஜெட்டா-ஜூல்கள் என்ற விகிதத்தில் அதிகரித்து வருகிறது.
  • மேலும் இது எதிர்காலத்தில் ஒரு பத்தாண்டுகளுக்கு 16-22 ஜெட்டா-ஜூல்கள் என்ற விகிதத்தில் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • ஜூல் என்பது ஆற்றல் அலகு மற்றும் ஒரு ஜெட்டா-ஜூல் ஒரு பில்லியன் டிரில்லியன் ஜூல்களுக்குச் சமம் (1021) ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்