TNPSC Thervupettagam

விரைவான சோதனை

April 1 , 2020 1610 days 559 0
  • அரை மணி நேரத்தில் முடிவுகளை அறிவிக்கும் வகையில் விரைவான சோதனைகளைக் கையாள கேரள அரசு அறிவித்துள்ளது.
  • இது சமுதாயத்தில் கரோனா தொற்று பரவியுள்ளதா என்பதைக் கண்டறிந்து, அவற்றைக் கையாளுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • விரைவான சோதனை என்பது ஒரு மனிதனின் உடலில் சமீபத்தில் ஏதேனும் வைரஸ் ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக நடத்தப்படும் ஒரு சோதனையாகும்.
  • நுண்ணுயிரி ஒரு மனிதனின் உடலில் நுழையும் போது, குறிப்பிட்ட பிற நோய் எதிர்ப்புப் பொருள்கள் இந்த நுண்ணுயிரியை எதிர்த்துப் போராடுவதற்காக வெளியிடப் படுகின்றன.
  • இந்த விரைவுச் சோதனையானது இரத்தம், செரம் அல்லது பிளாஸ்மா ஆகியவற்றின் மாதிரிகளில் இது போன்ற பிற நோய் எதிர்ப்புப் பொருள்களைக் கண்டறிந்து, வைரஸ் தொற்று இருப்பதை விரைவாக அறிவிக்கும்.
  • நோய்த் தொற்றின் போது வைரஸின் சமூகப் பரவலைக் கண்காணிப்பதற்காக வேண்டி  பெரும்பாலும் இந்தச் சோதனையானது மேற்கொள்ளப்படுகின்றது.
  • இது மனிதர்களின் இரத்த மாதிரிகளைக் கொண்டு மேற்கொள்ளப்படும் ஒரு எளிய முறையாகும். இது 10 முதல் 30 நிமிடங்களுக்குள் முடிவுகளை அறிவிக்கும்.
  • இது குறைந்த செலவைக் கொண்ட ஒரு சோதனையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்