விரைவு அடையாள பட்டை(FASTag) வாகனங்களுக்கு அனைத்து தேசிய நெடுஞ்சாலையிலுள்ள சுங்கச்சாவடிகளில் தனிப்பாதை செப்டம்பர்-1 லிருந்து அமைக்கப்படுகிறது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது அனைத்து மின்னணு சுங்கச் சாவடிகளில் விரைவு அடையாள ஓட்டு கிடைக்கப்பெறும் வசதிகளை இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய தேசிய செலுத்து நிறுவனத்துடன் (National Payment Corporation Of India - NPCI) கலந்து ஆலோசனை வழங்கியுள்ளது.
இவை ஆன்லைன் மூலம் விரைவு அடையாள ஓட்டு விற்பனை செய்தல் மற்றும் ஆஃப்லைன் மூலம் சுங்கச் சாவடிகளுக்கு அருகில் பொதுச் சேவை மையங்கள் அமைத்து அதன் மூலம் விற்பனை செய்தல் ஆகும்.
விரைவு அடையாள பட்டை (FASTag)
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது தேசிய நெடுஞ்சாலைகளிலுள்ள சுங்கச் சாவடிகளில் மின்னணு சுங்கம் வசூலிக்கும் திட்டத்தை ஏற்படுத்திள்ளது. இது FASTag என்று பெயர்.
FASTag என்பது கருவியாகும். இது ரேடியோ அதிர்வெண் அடையாளம் காணுதல் (RFID) தொழில் நுட்பத்தில் செயல்படுகிறது. இது முன்பணம் செலுத்தப்பட்ட கணக்கிலிருந்து நேரடியாகச் சுங்கம் செலுத்துவதற்கான ஒரு தொழில்நுட்பமாகும்.
இது உங்கள் வாகனத்தின் கண்ணாடியில் பொருத்தப்படும் . இதன் மூலம் சுங்கச் சாவடிகளில் நிறுத்தவேண்டிய அவசியம் இல்லாமல் தடையின்றி பயணம் செய்ய முடியும்.
விரைவு அடையாள பட்டை (FASTag)ன் காலக்கெடு 5 ஆண்டுகள் ஆகும், பின்பு நமது தேவைக்கு ஏற்ப FASTag யை / மீள் நிரப்பு செய்து கொள்ளலாம்.
FASTag-ஆனது சுங்கச் சாவடிகளில் வாகனங்களின் இடைவிடாத இயக்கத்திற்கு உதவுகிறது. மற்றும் தேசிய அளவிலான ஒருங்கிணைந்த சுங்கக் கட்டணத்தைப் பணமில்லாமல் செலுத்துவதற்கு வசதியாக உள்ளது.