TNPSC Thervupettagam

விரைவு எதிர்வினை குறியீட்டைக் (QR code) கொண்ட பட்டாசுகள் – தில்லி

September 24 , 2019 1764 days 666 0
  • தேசியத் தலைநகர்ப் பகுதியான தில்லியில் 2019 ஆம் ஆண்டின் தீபாவளிக்கான பட்டாசுப் பெட்டிகளில் தனித்துவமான இலச்சினை மற்றும் விரைவு எதிர்வினைக் குறியீடு ஆகியவற்றுடன் பட்டாசுகள் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.
    • பட்டாசுப் பெட்டிகளில் இருக்கும் இந்த தனித்துவமான இலச்சினையானது மக்கள் குறைந்த உமிழ்வு கொண்ட பசுமையான பட்டாசுகளை வாங்குகின்றார்களா அல்லது வழக்கமாக அதிக மாசுபடுத்துகின்ற பட்டாசுகளை வாங்குகின்றார்களா என்பதை அடையாளம் காண உதவுகின்றது.
    • QR குறியீடுகளில் பட்டாசுகளின் உற்பத்தி மற்றும் உமிழ்வுச் சோதனை போன்ற விவரங்கள் இருக்கும்.
  • இந்தப் பசுமையான பட்டாசுகள் ஒலி மற்றும் ஒளி ஆகிய இரண்டையும் கொண்டிருக்கும்.
  • தேசியத் தலைநகர்ப் பகுதியான தில்லியில் பசுமையான பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் முன்பு அறிவுறுத்தி இருந்தது.

பசுமையான பட்டாசுகள்

  • அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் கூற்றுப்படி பின்வரும் பட்டாசுகள் “பசுமையான பட்டாசுகளாகும்”.
    • 30-35% வரை குறைந்த உமிழ்வை ஏற்படுத்தும் நுண் துகள்களைக் (PM10 மற்றும் PM2.5) கொண்ட பட்டாசுகள்.
    • 35-40% வரையிலான குறைந்த உமிழ்வைக் கொண்ட சல்பர் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆக்சைடு ஆகியவற்றைக் கொண்ட பட்டாசுகள்.
  • இவை குறைந்த அளவிலான அலுமினியத்தைக் கொண்டுள்ளன. பேரியம் உப்புகள் மற்றும் உலர்த்தும் பொருளாகப் பயன்படுத்தப்படும் சாம்பல் ஆகியவை இந்த பட்டாசுகளில் தடை செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்