TNPSC Thervupettagam

விரைவு நோய் எதிர்ப்புப் பொருள் சோதனை

April 19 , 2020 1684 days 592 0
  • விரைவு நோய் எதிர்ப்புப் பொருள் சோதனையானது கண்டிப்பாக கண்காணிப்புப் சோதனையாகப் பயன்படுத்தப்படும் என்று இந்திய  அரசு அறிவித்துள்ளது.
  • சமீபத்தில் இந்தியா சீனாவிலிருந்து 5 இலட்சம் விரைவு நோய் எதிர்ப்புப் பொருள் சோதனை உபகரணங்களை இறக்குமதி செய்துள்ளது. 
  • இந்தியா கோவிட் – 19 நோய்த் தொற்றை கண்டறிவதற்காக டிஎன்ஏவை அடிப்படையாகக் கொண்ட தலைகீழ் குறிமுறையாக்க பல்படிம நொதித் தொடர் வினைச் (Reverse transcription polymerase chain reaction) சோதனையைத் தொடர்ந்து மேற்கொள்கின்றது.
  • இது தொண்டைச் சளியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப் படுகின்றது.
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின்படி (ICMR - Indian Council of Medical Research), இன்புளூயன்சா போன்ற அறிகுறிகள் மற்றும் சளி ஒழுகுதல் & தொண்டை வலி உள்ள நோயாளிகள் தலைகீழ் குறிமுறையாக்க பல்படிம நொதி தொடர் வினைச் சோதனையைக் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும்.
  • இச்சோதனையின் முடிவானது எதிர்மறையாக இருப்பின், அவர்கள் 7 நாட்களுக்குப் பின் நோய் எதிர்ப்புப் பொருள் சோதனையை மேற்கொள்ள வேண்டும். 
  • நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள ஒருவர் மீது அடுத்த 8 நாட்களுக்குப் பின் அவரது உடலில் உருவாகியுள்ள நோய் எதிர்ப்புப் பொருளைக் கண்டறிவதற்காக இந்தச் சோதனையானது மேற்கொள்ளப் படுகின்றது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்