இந்தியா, சீனாவிலிருந்து ரைபோ நியூக்ளிக் அமிலத்தை (Ribo Nucleic Acid) பிரித்தெடுக்கும் கருவிகளையும் நோய் எதிர்ப்பொருள் சோதனைக் கருவிகளையும் வாங்குகிறது.
இந்தியா சீனாவிலிருந்து தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களையும் (Personal Protective Equipment) இறக்குமதி செய்ய உள்ளது.
விரைவு நோய் எதிர்ப்பொருள் சோதனையானது பல்படிம நொதி தொடர்வினைச் சோதனையை விடவும் விரைவானதாகும்.
இது சோதனை முடிவுகளை 15 முதல் 30 நிமிடங்களில் வழங்குகிறது.
இது ஒரு நபரின் விரலில் குத்துவதற்கு என்று ஓர் அறுவைக் கத்தியைப் பயன்படுத்துகிறது. மேலும் அவரின் நோய் எதிர்ப்பொருள்களைப் பரிசோதிக்க அவரின் இரத்தத்தைச் சேகரிக்கிறது
இச்சோதனை எம்-எதிர்ப்புப் புரதங்கள் (IgM - Immunoglobulin M) மற்றும் ஜி-எதிர்ப்புப் புரதங்களைச் (IgG - Immunoglobulin G) சரிபார்க்கிறது.