TNPSC Thervupettagam

விர்ஜின் அட்லாண்டிக் விமானம்

December 9 , 2023 352 days 193 0
  • இது உலகின் முதலாவது 100% சுற்றுச்சூழல் நிலையான விமான எரிபொருளில் (SAF) இயங்கும் விமானத்தை லண்டனில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு இயக்கியது.
  • ஒரு வணிக ரீதியிலான விமானம் 100% அளவிற்கு இவ்வகை எரிபொருளில் நீண்ட தூரம் பறந்தது இதுவே முதல் முறையாகும்.
  • கழிவு சமையல் எண்ணெய் போன்ற மூலங்களிலிருந்துப் பெறப்பட்ட இது உமிழ்வை 70% வரை குறைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
  • ஆனால் இதனைத் தயாரிக்க தேவையான பொருட்களின் அதிகப்படியான விலை மற்றும் குறைந்த விநியோகம் ஆகியன இதன் பெரிய அளவிலான உற்பத்தியைக் கடினமாக்குகிறது.
  • தற்போது, உலகளாவிய ஜெட் எரிபொருள் பயன்பாட்டில் 0.1% க்கும் குறைவாகவே SAF உள்ளது.
  • உலகளாவியக் கார்பன் வாயு வெளியேற்றத்தில் விமானப் போக்குவரத்துத் துறையின் பங்கு 2-3% என மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்