TNPSC Thervupettagam

விர்ஜின் ஆர்பிட் ஏவுகலம்

January 15 , 2023 683 days 326 0
  • ஐக்கிய இராச்சியத்தினால் விண்ணில் ஏவப்பட இருந்த முதல் சுற்றுப்பாதை ஆய்வுக் கலமானது வெற்றியடையவில்லை.
  • இந்த "கிடைமட்ட ஏவுதல்" திட்டமானது கடலோர நகரமான நியூகுவேயில் இருந்து ஏவப் பட்டது.
  • இந்த ஏவுகலமானது, "காஸ்மிக் கேர்ள்" என்று அழைக்கப்படும் மாற்றியமைக்கப்பட்ட போயிங் 747 வாகனத்தின் மூலம் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அட்லாண்டிக் பெருங்கடல் பரப்பில் விடுவிக்கப்பட்டது.
  • அதன் அமெரிக்கத் தளத்திற்குப் பதிலாக வேறு ஒரு பகுதியிலிருந்து மேற்கொள்ளப் படும் இந்த முதல் ஆய்வுத் திட்டத்தில் ஒன்பது சிறிய செயற்கைக் கோள்களைப் புவியின் தாழ்மட்டச் சுற்றுப்பாதையில் (LEO) நிலை நிறுத்தத் திட்டமிட்டிருந்தது.
  • விர்ஜின் ஆர்பிட்டின் வரலாற்றில், 2020 ஆம் ஆண்டில் முதன்முதலில் விண்ணில் ஏவப் பட்ட ஒரு பணி தோல்வியடைந்ததையடுத்து, இவ்வாறு நிகழ்ந்தது இது இரண்டாவது முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்