விலங்கு இன கண்டுபிடிப்புகள் – புதிய இனங்கள் மற்றும் புதிய பதிவுகள் 2023
July 8 , 2023 510 days 316 0
இந்தியாவானது, 2022 ஆம் ஆண்டில் 664 புதிய விலங்கு இனங்களை அதன் விலங்கின தரவுத் தளத்தில் சேர்த்துள்ளது.
இதில் 467 புதிய உயிரினங்கள் மற்றும் இந்தியாவில் முதன்முறையாக கண்டறியப் பட்டுள்ள 197 உயிரினங்கள் ஆகியவை அடங்கும்.
2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் 339 புதிய தாவர வகைகள் தரவுத் தளத்தில் சேர்க்கப் பட்டுள்ள நிலையில், இதில் 186 வகைகள் அறிவியலுக்குப் புதியவையாகவும் மற்றும் 153 வகைப் பாடுகள் புதிய இனப் பரவல் பதிவுகளாகவும் சேர்க்கப்பட்டுள்ளன.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த முக்கிய விலங்கினங்களில் மூன்று புதிய பாலூட்டி இனங்கள் மற்றும் ஒரு புதிய பதிவு ; இரண்டு புதிய பறவை இனங்கள் பதிவு; 30 புதிய ஊர்வன இனங்கள் மற்றும் அவற்றின் இரண்டு புதிய பதிவுகள்; ஆறு புதிய இருவாழ்வி இனங்கள் மற்றும் ஒரு புதிய பதிவு; மற்றும் 28 புதிய மீன் இனங்கள் மற்றும் எட்டு புதிய பதிவுகள் ஆகியன அடங்கும்.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட விலங்கினங்களின் எண்ணிக்கையில் 583 இனங்களுடன் முதுகெலும்பில்லா உயிரினங்கள் மிக அதிகபட்சமாக உள்ள நிலையில் முதுகெலும்பு உடைய இனங்களின் எண்ணிக்கை இதில் 81 ஆகும்.
முதுகெலும்பில்லாத உயிரினங்களில் 384 இனங்களுடன் பூச்சி இனங்கள் அதிகம் காணப் படுகின்றன.
2022 ஆம் ஆண்டில், கேரளாவில் அதிகபட்ச (82) அளவிலான புதிய கண்டுபிடிப்புகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
கர்நாடகாவில் பதிவான 64 புதிய இனங்கள் மற்றும் 24 புதிய பதிவுகள் மொத்தப் பதிவுகளில் 13.2% ஆகும்.
தமிழ்நாட்டில் பதிவான 71 புதிய இனங்கள் மற்றும் 13 புதிய பதிவுகள் ஆனது நாட்டின் அனைத்து புதிய இனங்கள் மற்றும் புதிய பதிவுகளில் 12.6% பங்கினைக் கொண்டு உள்ளது.
2022 ஆம் ஆண்டு தாவர இனங்கள் கண்டுபிடிப்புகள் பட்டியலானது, 2022 ஆம் ஆண்டின் போது இந்தியத் தாவரப் பட்டியலில் சேர்க்கப்பட்ட 339 வகைப்பாடுகளைக் கொண்டுள்ளது.
இந்தியத் தாவர இனங்களில் 319 இனங்கள் மற்றும் 20 உட்பிரிவு வகைப்பாடுகள் புதிது என்ற வகையில் இவை உள்ளன.