3,500 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த மையத்தில், "உலகின் மிகப்பெரிய சிவிங்கிப் புலி வளங்காப்பு திட்டம்" மேற்கொள்ளப்படுகிறது.
வன்தாரா பகுதியில் 2,000க்கும் மேற்பட்ட இனங்கள் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மீட்கப்பட்ட, அருகி வரும் மற்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளான விலங்குகள் காணப்படுகின்றன.
மத்திய அரசு ஆனது, சமீபத்தில் வன்தாராவுக்கு மதிப்புமிக்க 'பிராணி மித்ரா' எனப் படும் தேசிய விருதை வழங்கியது என்பதோடு இது இந்தியாவின் விலங்குகள் நலன் மீதான க்கான மிக உயரிய விருதாகும்.
இந்த மையங்கள் ஆனது ICU, MRI, CT ஊடுருவு ஆய்வுக் கருவிகள், ஊடு கதிர் ஆய்வுக் கருவிகள், அல்ட்ராசவுண்ட், பல்வேறு உள்நோக்குக் குழாய்கள், பல் ஆய்வுக் கருவிகள், அதிரலைச் சிகிச்சை, இரத்தச் சுத்திகரிப்பு (கூழ்மப்பிரிப்பு) மற்றும் அறுவை சிகிச்சை முறைகளின் போது நேரடி ஒளிப்பதிவு நடைமுறைகளுக்கான ஒரு மிகவும் அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன.