TNPSC Thervupettagam

விலங்குகளின் மிகப்பெரிய மரபணு

September 19 , 2024 8 days 96 0
  • தென் அமெரிக்கக் கண்ட நுரையீரல் மீன் என்பது ஒரு அசாதாரண உயிரினம் மற்றும் உயிருடன் வாழும் ஒரு புதைபடிவமாகும்.
  • இது பிரேசில், அர்ஜென்டினா, பெரு, கொலம்பியா, வெனிசுலா, பிரெஞ்சு கயானா மற்றும் பராகுவே ஆகிய நாடுகளில் உள்ள மெதுவாக நகரும் மற்றும் தேங்கி நிற்கும் நீர் நிலைகளில் வாழ்கிறது.
  • இது முதல் முறையாக தோன்றிய நில வாழ் முதுகெலும்பு உயிரிகளை ஒத்த உயிர் வாழும் உயிரினம் ஆகும் என்பதோடு இது சுமார் 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அதன் ஆதி மூதாதை இனங்களை ஒத்திருக்கிறது.
  • இந்த நன்னீர் வாழ் இனம் ஆனது (லெப்பிடோசிரேன் பாராடாக்சா) பூமியில் உள்ள மற்ற எந்த விலங்கினையும் விட மிகப்பெரிய மரபணுவினைக் கொண்டுள்ளது என்ற நிலையில் இது ஒரு உயிரினத்தின் அனைத்து மரபணுத் தகவல்களையும் கொண்டு உள்ளது.
  • இதன் மரபணு ஆனது மனித மரபணு வரைபடத்தை விட சுமார் 30 மடங்கு அதிகமாக இருக்கும்.
  • இந்த நுரையீரல் மீனின் ஒவ்வொரு செல்லிலும் உள்ள டிஎன்ஏவின் நீளம் சுமார் 60 மீட்டர் வரை நீட்டிக்கும்.
  • மனித மரபணு வெறும் 2 மீட்டர் வரையே காணப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்