தென் அமெரிக்கக் கண்ட நுரையீரல் மீன் என்பது ஒரு அசாதாரண உயிரினம் மற்றும் உயிருடன் வாழும் ஒரு புதைபடிவமாகும்.
இது பிரேசில், அர்ஜென்டினா, பெரு, கொலம்பியா, வெனிசுலா, பிரெஞ்சு கயானா மற்றும் பராகுவே ஆகிய நாடுகளில் உள்ள மெதுவாக நகரும் மற்றும் தேங்கி நிற்கும் நீர் நிலைகளில் வாழ்கிறது.
இது முதல் முறையாக தோன்றிய நில வாழ் முதுகெலும்பு உயிரிகளை ஒத்த உயிர் வாழும் உயிரினம் ஆகும் என்பதோடு இது சுமார் 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அதன் ஆதி மூதாதை இனங்களை ஒத்திருக்கிறது.
இந்த நன்னீர் வாழ் இனம் ஆனது (லெப்பிடோசிரேன் பாராடாக்சா) பூமியில் உள்ள மற்ற எந்த விலங்கினையும் விட மிகப்பெரிய மரபணுவினைக் கொண்டுள்ளது என்ற நிலையில் இது ஒரு உயிரினத்தின் அனைத்து மரபணுத் தகவல்களையும் கொண்டு உள்ளது.
இதன் மரபணு ஆனது மனித மரபணு வரைபடத்தை விட சுமார் 30 மடங்கு அதிகமாக இருக்கும்.
இந்த நுரையீரல் மீனின் ஒவ்வொரு செல்லிலும் உள்ள டிஎன்ஏவின் நீளம் சுமார் 60 மீட்டர் வரை நீட்டிக்கும்.