விலங்குகளுக்கான நிலையான கால்நடை சிகிச்சை வழிகாட்டுதல்கள்
November 6 , 2024 19 days 53 0
கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்பண்ணைத் துறை (DAHD) ஆனது, கால்நடைகள் மற்றும் கோழி வளர்ப்பிற்கான "நிலையான கால்நடை சிகிச்சை வழிகாட்டுதல்களை (SVTGs)" வெளியிட்டுள்ளது.
உணவு மற்றும் வேளாண் அமைப்புடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள SVTG ஆனது ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மேம்பாட்டு முகமையினால் (USAID) ஆதரிக்கப் படுகின்றன.
இது பல்வேறு விலங்கு நோய்களுக்குத் தரப்படுத்தப்பட்ட, முறையான சிகிச்சையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதோடு இதனால் இந்தியா முழுவதும் மேம்படுத்தப் பட்ட விலங்கு நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு ஆகியவற்றை உறுதி செய்கிறது.
நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், மருந்து செலுத்தப்பட்ட காலம் மற்றும் உணவிற்காக அந்த விலங்கு கொல்லப்படும் கால இடைவெளி, சாத்தியமான பக்க விளைவுகள் மற்றும் முதல் தர சிகிச்சைக்கான முடிவு அளவுருக்கள் உட்பட பல மருந்துகளுக்கான மருந்தளவு, வழி, சிகிச்சையின் காலம் ஆகியவற்றைக் கொண்ட பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சைகள் இதில் அடங்கும்.