TNPSC Thervupettagam

விலங்குகள் பலியிடுதலுக்குத் தடை – திரிபுரா

September 29 , 2019 1759 days 652 0
  • மாநிலம் முழுவதும் மதம் தொடர்பான இடங்களில் விலங்குகளைப் பலியிடுவதற்குத் தடை விதிக்குமாறு திரிபுரா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • திரிபுரா மாநிலத்திற்குள் உள்ள எந்தவொரு கோயில்களிலும் எந்தவொரு விலங்கையோ அல்லது பறவையையோ பலியிட அரசு உட்பட எந்தவொரு நபரும் அனுமதிக்கப்படக் கூடாது என்று அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • இந்திய அரசியலமைப்பின் 21வது சரத்தின் கீழ் விலங்குகளுக்கும் வாழ்வதற்கான அடிப்படை உரிமை உண்டு என்று அந்நீதிமன்றம் கூறியுள்ளது.
  • திரிபுராவின் பின்வரும் புகழ்பெற்ற கோவில்களில் விலங்குகளைப் பலியிடுவதற்கு எதிராக ஓய்வு பெற்ற நீதித் துறை அதிகாரியினால் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • மாதா திரிபுரேஸ்வரி தேவி கோயில் மற்றும் சதுர் தாஸ் தேவதா கோயில்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்