TNPSC Thervupettagam

விலங்குகள் மற்றும் தாவரங்கள் கண்டுபிடிப்புகள் – 2019

October 14 , 2020 1377 days 584 0
  • இந்தியாவில் 2019 ஆம் ஆண்டில் விஞ்ஞானிகள் குறைந்தது 364 புதிய விலங்கு இனங்கள் மற்றும் 253 புதிய தாவர இனங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
  • இந்த 364 விலங்கு இனங்கள் இதுவரையில் மனிதர்களுக்கு அறியாதவையாக இருந்துள்ளன.
  • மேலும் அவற்றில் 116 விலங்கு இனங்கள் உலகில் இதற்கு முன்பு கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஆனால் அவை இந்தியாவில் இதற்கு முன்பு பதிவு செய்யப் படவில்லை.
  • கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த 364 புதிய இனங்களில் 4 இனங்கள் புதைபடிவ இனங்களாக உள்ளன.
  • கூடுதலாக 4 துணை இனங்களும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
  • கண்டுபிடிக்கப் பட்டுள்ளவைகளில் அதிக எண்ணிக்கையிலான இனங்கள் பூச்சி இனங்களாக உள்ளன.
  • இந்தப் புதிய விலங்குகளின் கண்டுபிடிப்புகளுடன், இந்தியாவானது 1,02,161 விலங்கு இனங்களைக் கொண்டுள்ளது.
  • இது உலக அளவில் மொத்த எண்ணிக்கையில் 6.52% ஆக உள்ளது.
  • 50,000ற்கும் மேற்பட்ட தாவர இனங்கள் இந்தியாவிலிருந்து அடையாளம் காணப் பட்டுள்ளன.
  • இந்தக் கண்டுபிடிப்புகள் இந்திய விலங்கியல் ஆய்வு மையம் மற்றும் இந்தியத் தாவரவியல் மையம் ஆகியவற்றினால் புத்தக வடிவில் வெளியிடப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்