TNPSC Thervupettagam

விலை குறைவான நோயறிதல் சோதனை

May 16 , 2019 1893 days 691 0
  • மும்பையில் உள்ள தேசிய நோய்த்தடுப்பு ஆய்வியல் நிறுவனமானது பின்வருவனவற்றைக் கண்டறிவதற்காக விலை குறைவான “பாய்ன்ட் ஆப் கேர்” என்ற விரைவான நோயறிதல் சோதனையை வடிவமைத்துள்ளது.
    • மிகக் கடுமையான ஹீமோபிலியா A
    • வோன் வில்லிபிராண்ட் நோய் (VWD - Von Willebrand Disease)
  • மேலே குறிப்பிட்டுள்ள 2 நோய்களைக் கொண்ட நோயாளிகள் மூளையிலிருந்து இரத்தக் கசிவு, இரைப்பையிலிருந்து இரத்தக் கசிவு, மூக்கு அல்லது ஈறுகளிலிருந்து இரத்தக் கசிவு போன்ற உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் விளைவுகளைக் கொண்டிருப்பார்கள்.
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின்படி இந்த பரிசோதனைப் பொருட்களின் மதிப்பு ரூ.50 ஆகும். ஆனால் இவற்றின் தற்போதைய மதிப்பு ரூ.4000 முதல் ரூ.10,000 வரையாக உள்ளது.
VWD
  • இது காணப்படாத அல்லது குறைபாடு கொண்ட வோன் வில்லிபிராண்டு காரணியினால்  (Von Willebrand Factor - VWF) ஏற்படக்கூடிய ஒரு மரபணுக் கோளாறாகும்.
  • VWF என்பது ஒரு இரத்தக் கசிவுப் புரதமாகும்.
  • இரத்தப்போக்கு ஏற்படும்போது VWF ஆனது இரத்தத் தட்டை அணுக்களை ஒன்றாக இணைப்பதற்கும் இரத்தப் போக்கைத் தடுக்க ஒரு உறைவை உருவாக்குவதற்கும் உதவுகின்றது.
  • குறைபாடு உள்ள மக்கள் போதிய VWF-ஐக் கொண்டிருப்பதில்லை.
  • எனவே, இது இரத்தம் உறையவும் இரத்தக் கசிவைத் தடுக்கவும் அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்