TNPSC Thervupettagam

விளாடிமிர் புடினுக்குப் பிடியாணை

March 23 , 2023 615 days 279 0
  • தி ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் ஆனது உக்ரைன் நாட்டில் குழந்தைகள் கடத்தப்பட்ட விவகாரத்தில் விளாடிமிர் புடினுக்கு எதிராக சிறை பிடிப்புப் பற்றாணையினைப் பிறப்பித்துள்ளது.
  • இந்த சர்வதேஸ் நீதிமன்றத்தின் அதிகார வரம்பினை ரஷ்யா அங்கீகரிக்கவில்லை ஆதலால் ரஷ்யா அதன் பற்றாணைகளுக்கு உட்பட்டதில்லை.
  • ஆனால் ரஷ்யத் தலைவர் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் 123 உறுப்பினர் நாடுகளில் பயணம் மேற்கொள்வதில் இருக்கும் சுதந்திரத்தில் வரம்புகள் விதிக்கப் படும்.
  • இந்தியாவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உறுப்பினராக இல்லை.
  • புடின் G20 அமைப்பின் உறுப்பினர் நாடுகளின் உலகத் தலைவர்களின் உச்சி மாநாட்டிற்காக, இந்த ஆண்டு இறுதியில் புது டெல்லிக்குப் பயணம் மேற் கொள்ள உள்ளார்.
  • சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது, போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் அல்லது இனப் படுகொலை தொடர்பான வழக்குகளில் இருந்து உலக நாடுகளின் தலைவர்களுக்கு விலக்கு அளிக்கவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்