2018 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட உள்ள 11-வது சர்வதேச நோய் வகைப்பாட்டியலின் (International Classification of Disease - ICD) படி, அதீத அளவில் விளையாடும் குறைபாட்டை (Gaming disorder) ஓர் மனநல நிலைசார்ந்த விவகாரமாக (Mental Health Condition) உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்த உள்ளது.
அமெரிக்க உளவியல் மனநல நிபுணர் சங்கத்தினால் வெளியிடப்படும், மனநல சிகிச்சை வல்லுநர்களின் பைபிள் என்றழைக்கப்படும் V-வகை நிலை மனநல குறைபாட்டுக்கான நோயறிதல் மற்றும் புள்ளியியல் கையேட்டில் ஏற்கெனவே கேமிங் குறைபாடு மனநல நிலை சார்ந்த விவகாரம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது
நோய்களை வகைப்படுத்துவதற்காக, நோயறிதல் வழிமுறைகளின் தொகுப்பு அமைவை (system of diagnostic codes) வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட சர்வதேச ஆரோக்கிய பராமரிப்பு வகைப்படுத்து அமைப்பே ICD ஆகும்.
உலக சுகாதார நிறுவனத்தினால் இத்தகு வகைப்படுத்துதல் அமைப்பு நிர்வகிக்கப்படுகின்றது.
குறிப்பிட்ட கால அளவில் திருத்தியமைக்கப்படும் இந்த வகைப்பாட்டு முறையில் தற்போது 10-வது திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.