TNPSC Thervupettagam

விளையாட்டு வீரர்களுக்குப் பரிசு – மு.க. ஸ்டாலின்

June 30 , 2021 1303 days 584 0
  • நடைபெறவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்பவர்களுக்கு தமது அரசாங்கமானது பரிசுகளை அளிக்கும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.
  • அதில் தங்கப் பதக்கம் வெல்பவருக்கு ரூ.3 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படும்.
  • வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ. 2 கோடியும் வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ. 1 கோடியும்  பரிசுத் தொகையாக வழங்கப்படும்.
  • சென்னையைச் சேர்ந்த ககன் நரங் என்பவர் மட்டுமே தமிழ்நாட்டிலிருந்து சென்று ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தனிநபர் பிரிவில் பதக்கம் வென்ற ஒரே நபராவார்.
  • இவர் 2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக் போட்டியின் ஆடவர் 10 மீ ஏர் பிஸ்டல் சுடுதல் போட்டியில் இந்தியா சார்பாக போட்டியிட்டு வெண்கலப் பதக்கம் வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்