நடைபெறவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்பவர்களுக்கு தமது அரசாங்கமானது பரிசுகளை அளிக்கும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.
அதில் தங்கப் பதக்கம் வெல்பவருக்கு ரூ.3 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படும்.
சென்னையைச் சேர்ந்த ககன் நரங் என்பவர் மட்டுமே தமிழ்நாட்டிலிருந்து சென்று ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தனிநபர் பிரிவில் பதக்கம் வென்ற ஒரே நபராவார்.
இவர் 2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக் போட்டியின் ஆடவர் 10 மீ ஏர் பிஸ்டல் சுடுதல் போட்டியில் இந்தியா சார்பாக போட்டியிட்டு வெண்கலப் பதக்கம் வென்றார்.