கேரளாவில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் முதல் பிரத்தியேகக் கப்பல் மாற்றுச் சரக்கேற்றல் (டிரான்ஸ்-ஷிப்மென்ட்) துறைமுகத்தின் முதல் கட்டப் பகுதியானது அதன் முதல் கப்பலினை ஜூலை 12 ஆம் தேதியன்று வரவேற்க உள்ளது.
இது நாட்டின் முதல் பகுதியளவு தானியங்கி கொள்கலன் முனையம் என்றதொரு வரலாற்றினைப் படைக்கிறது.
இந்த விழிஞ்சம் துறைமுகத்தில் உலகின் மிகப் பெரிய கொள்கலன் கப்பல்கள் சில விரைவில் வந்து முகாமிடவுள்ளன.
ஐரோப்பா, பாரசீக வளைகுடா மற்றும் தொலைதூரக் கிழக்கு நாடுகளை இணைக்கும் சர்வதேசக் கப்பல் பாதையில் இருந்து வெறும் 10 கடல் மைல் தொலைவில் உள்ளதால் இந்தத் துறைமுகம் உத்தி சார் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.