TNPSC Thervupettagam

விழுதுகள் – ஒற்றைத் தீர்வு மையம்

November 29 , 2024 45 days 152 0
  • சென்னை நகரில் சோழிங்கநல்லூரில் உள்ள கண்ணகி நகரில் அமைக்கப்பட்டுள்ள ‘விழுதுகள் – ஒற்றைத் தீர்வு மையத்தினை’ தமிழக முதல்வர் அவர்கள் திறந்து வைத்தார்.
  • இது மாற்றுத் திறனாளிகளுக்கான உடல்நலம் தொடர்பான மறுவாழ்வு சேவைகளை வழங்குகிறது.
  • மாற்றுத் திறனாளிகள் நலத் துறையால் நிறுவப்பட்ட இது உலக வங்கியின் நிதி உதவியுடன் கூடிய தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் அங்கமாகும்.
  • இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 273 மையங்கள் நிறுவப்பட உள்ளன.
  • சிறப்புக் கல்வி, பார்வை அளவீட்டியல், கேட்பியல் மற்றும் பேச்சு பயிற்சி மருத்துவம், உடலியக்க மருத்துவம், செய்தொழில் தொடர்பான சிகிச்சை முறை மற்றும் உளவியல் ஆலோசனை ஆகிய மறுவாழ்வு வல்லுநர்கள் ஒரே கட்டமைப்பின் கீழ் பணியாற்றுவது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்