தமிழ்நாடு மாநில சட்டமன்றமானது ஒரு புதிய பல்கலைக்கழகத்தை உருவாக்கிடச் செய்வதற்காக டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழக மசோதா 2021 என்ற ஒரு மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
இதன்படி, திருவள்ளூவர் பல்கலைக்கழகமானது அடுத்து இரண்டாக பிரிக்கப்பட்டு, விழுப்புரத்தில் ஒரு புதிய பல்கலைக்கழகமானது உருவாக்கப்பட உள்ளது.
இந்தப் புதிய பல்கலைக்கழகமானது இந்தக் கல்வி ஆண்டிலிருந்துச் செயல்பட இருக்கின்றது.
திருவள்ளுவர் பல்கலைக்கழகமானது முன்னாள் முதல்வரான மு. கருணாநிதி அவர்களால் ஏற்படுத்தப் பட்டது.