TNPSC Thervupettagam

விவசாயிகளின் பயன்பாட்டிற்கு யூரியா கோல்டு அறிமுகம்

July 31 , 2023 357 days 214 0
  • யூரியா கோல்டு சமீபத்தில் ராஜஸ்தானில் அறிமுகப்படுத்தப் பட்டது.
  • “யூரியா கோல்டு” என்பது சல்பர் (கந்தகம்) பூசப்பட்ட புதிய யூரியா வகையாகும்.
  • இது மண்ணில் உள்ள கந்தகப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • இந்த “புதிய வகை உரம்” ஆனது வேம்பு பூசப்பட்ட யூரியாவை விட விலை மலிவானது மற்றும் செயல்திறன் மிக்கதாகும்.
  • இது மேம்பட்ட நைட்ரஜன் பயன்பாட்டுத் திறன், இந்தப் பயன்பாட்டிற்குக் குறைவான அளவிலான தேவை மற்றும் மேம்பட்ட பயிர் தரம் ஆகியவற்றினை உறுதி செய்கிறது.
  • சல்பர் பூசப்பட்ட யூரியா மண்ணில் நைட்ரஜனை மெதுவாக வெளியிட உதவுகிறது,  எனவே இது அதன் நைட்ரஜன் இருப்பு மற்றும் உறிஞ்சுதலை அதிகரிக்கிறது.
  • 15 கிலோ யூரியா கோல்டு ஆனது 20 கிலோ வழக்கமான யூரியாவின் செயல்திறனுடன் ஒப்பிடத் தக்கது.
  • இந்தியாவில் 266 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு மூட்டை யூரியா, பாகிஸ்தானில் 800 ரூபாய், வங்கதேசத்தில் 720 ரூபாய்க்கும், சீனாவில் 2,100 ரூபாய்க்கும், அமெரிக்காவில் 3,000 ரூபாய்க்கும் விற்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்