TNPSC Thervupettagam

விவசாயிகளைப் பாதுகாக்க உதவும் மேற்பூச்சுக் கூழ்மம்

March 18 , 2019 2080 days 618 0
  • தூறல்களில் இருந்து தோலைப் பாதுகாப்பதற்காக வேளாண் விவசாயிகளுக்கு என்று புதிய கூழ்மத்தினை உருவாக்கியுள்ளனர்.
  • சிட்டோசனை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கூழ்மமானது நண்டுகள் மற்றும் இறால்களின் மேலோடுகளிலிருந்து உருவாக்கப்பட்டது. இதனுடன் இவர்கள் ஒரு நியூக்ளோபைல் மற்றும் சில நீர்ம மறுதுணைப் பொருட்களை சேர்த்து நிலையான மற்றும் தேவையான pH மதிப்புடைய கூழ்மத்தினைப் பெறுகின்றனர்.
  • இந்தக் கூழ்மமானது வணிக ரீதியாக கிடைக்கக் கூடிய பரவலான பூச்சிக்கொல்லிகளை இரத்த ஓட்டத்திற்குள் நுழைவதற்கு முன்னரே தடை செய்கிறது. இதனால் பூச்சிக் கொல்லிகளால் தூண்டப்படும் நொதிகள் தடை செய்யப்படுகின்றன.
தீங்கு தரக்கூடியப் பாதிப்புகள்
  • ஆர்கனோபாஸ்பேட் பூச்சிக் கொல்லிகள் மனித உடலின் முக்கியமான சில நொதிகளை சுரப்பதைத் தடை செய்கிறது.
  • இதனால் நரம்பு மண்டலம், இதயம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இனப்பெருக்க மண்டலம் ஆகியவற்றின் செயல்பாடுகள் பாதிக்கப்படக்கூடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்