TNPSC Thervupettagam

விவசாயிகள் துயரக் குறியீடு

July 9 , 2023 380 days 223 0
  • இந்திய வேளாண் ஆராய்ச்சிச் சபையின் மத்திய உலர்நில வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம் (CRIDA) ஆனது ‘விவசாயிகளின் துயரக் குறியீடு’ எனப்படும் ஒரு வகையான முன் எச்சரிக்கை முறையினை உருவாக்கியுள்ளது.
  • இந்தியாவில் இது போன்று மேற்கொள்ளப் படுவது இதுவே முதல் முறையாகும்.
  • பயிர் இழப்பு / போதிய லாபம் தராமை மற்றும் வருவாய் நெருக்கடி ஆகிய வடிவில் விவசாயிகள் எதிர்கொள்ளும் துயரங்களைக் குறைப்பதே இத்தகையக் குறியீட்டை உருவாக்குவதன் ஒரு முக்கிய நோக்கமாகும்.
  • 21 கேள்விகளின் அடிப்படையில், விவசாயிகளின் துயரத்தின் அளவு கண்டறியப்படும்.
  • இந்தக் குறியீட்டில் 0-1 வரை மதிப்புகள் மதிப்பிடப்படும்.
  • 0 முதல் 0.5 வரையிலான மதிப்பு ‘குறைந்த அளவு’ துயரத்தினைக் குறிக்கும், 0.5 முதல் 0.7 வரையிலான மதிப்பு ‘மிதமான’ துயரத்தைக் குறிக்கும், 0.7 என்ற மதிப்பிற்கு மேல் இருந்தால் ‘கடுமையான’ துயர நிலையைக் குறிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்