TNPSC Thervupettagam

விவசாயிகள் நலனுக்கான நடவடிக்கைகள் – தமிழ்நாடு

October 30 , 2024 31 days 111 0
  • 2021 ஆம் ஆண்டு ஏற்பட்ட வடகிழக்குப் பருவமழை முதல் ஏற்பட்ட பயிர்ச் சேதங்களை எதிர்கொண்ட சுமார் 1.19 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ஒரு இழப்பீட்டுத் தொகையாக வழங்குவதற்காக மொத்தம் 91.07 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டு முதல் 29.34 லட்சம் விவசாயிகளின் 5,148 கோடி ரூபாய் மதிப்பிலான பயிர் இழப்பீட்டிற்கான காப்பீட்டுக் கோரல்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
  • கரும்பு விவசாயிகளுக்கு நியாயமான மற்றும் இலாபகரமான விலை மற்றும் சிறப்பு ஊக்கத் தொகையாக மொத்தம் 624.04 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியினை அரசு அறிவித்துள்ளது.
  • கரும்பு சாகுபடியானது சுமார் 95,000 ஹெக்டேரில் இருந்து 1.54 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.
  • சர்க்கரை ஆலைகளுக்கு 600 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.
  • வேளாண் பயன்பாட்டு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்கு சுமார் 335 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
  • மொத்தம் 14 புதிய உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன.
  • 25 உழவர் சந்தைகளில் மொத்தமாக சுமார் 2.75 கோடி ரூபாய் செலவில் கழிவுகளை உரமாக்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்