2021 ஆம் ஆண்டு ஏற்பட்ட வடகிழக்குப் பருவமழை முதல் ஏற்பட்ட பயிர்ச் சேதங்களை எதிர்கொண்ட சுமார் 1.19 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ஒரு இழப்பீட்டுத் தொகையாக வழங்குவதற்காக மொத்தம் 91.07 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு முதல் 29.34 லட்சம் விவசாயிகளின் 5,148 கோடி ரூபாய் மதிப்பிலான பயிர் இழப்பீட்டிற்கான காப்பீட்டுக் கோரல்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
கரும்பு விவசாயிகளுக்கு நியாயமான மற்றும் இலாபகரமான விலை மற்றும் சிறப்பு ஊக்கத் தொகையாக மொத்தம் 624.04 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியினை அரசு அறிவித்துள்ளது.
கரும்பு சாகுபடியானது சுமார் 95,000 ஹெக்டேரில் இருந்து 1.54 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.
சர்க்கரை ஆலைகளுக்கு 600 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.
வேளாண் பயன்பாட்டு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்கு சுமார் 335 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
மொத்தம் 14 புதிய உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன.
25 உழவர் சந்தைகளில் மொத்தமாக சுமார் 2.75 கோடி ரூபாய் செலவில் கழிவுகளை உரமாக்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.