TNPSC Thervupettagam

விஷமுள்ள பாம்புக்கடி

November 11 , 2024 11 days 76 0
  • விஷமுள்ள பாம்புக்கடியினை 1939 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலப் பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் ஓர் அறிவிக்கக் கூடிய நோயாக தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
  • விஷமுள்ள பாம்புக்கடி என்பது விஷப்பாம்பு கடித்தால் ஏற்படும் உயிருக்கு ஆபத்தான மருத்துவப் பாதிப்பு நிலையாகும்.
  • கிராமப்புறம் மற்றும் பாம்புகள் அதிகம் உள்ள பகுதிகளில் இது ஒரு மிகவும் முக்கிய சுகாதாரப் பிரச்சினையாக உள்ளது.
  • இந்த ஒரு நடவடிக்கையானது சிறந்த தடுப்பு உத்திகளுக்கு வழி வகுக்கும், உயிரிழப்பு விகிதங்களைக் குறைக்கும் மற்றும் மாநிலம் முழுவதும் இதற்கான முக்கிய சிகிச்சை வசதிகளை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • உலக சுகாதார அமைப்பானது பாம்புக்கடியை உலகளாவிய பெரும் பொது சுகாதாரப் பிரச்சினையாக அங்கீகரித்து, உலகளவில் பாம்புக்கடியால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் குறைபாடுகளைக் குறைப்பதற்கான ஓர் உத்தியை அறிமுகப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்