இந்திய அணியின் கேப்டன்களான, விராட் கோலி மற்றும் மித்தாலி ராஜ் ஆகியோர் முறையே ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட்டின் உலக முன்னணி வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பலமுறை முன்னணி வீரர்களாக அறிவிக்கப்பட்ட வீரேந்திர சேவாக் மற்றும் குமார் சங்ககாராவைத் தொடர்ந்து மூன்றாவது வீரராக விராட் கோலி இடம் பெற்றுள்ளார். விராட் கோலி இரண்டாவது முறையாக முன்னணி வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இந்தியா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இடம் பெற்றிருந்த போது மித்தாலி ராஜ் ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் அதிக ரன் எடுத்த முன்னணி வீராங்கனையாக அறிவிக்கப்பட்டு ஒராண்டுக்கு பிறகு இந்தப் பெருமையைப் பெற்றுள்ளார்.
இவர்களுடன் மூன்று ஆங்கில பெண் கிரிக்கெட் வீராங்கனைகளான கெதர் நைட், ஆன்யா ஷ்ருப்சோல் மற்றும் நாட் ஷிவெர் ஆகியோரை சேர்த்து மொத்தம் ஐவர், விஸ்டெனின் இந்தாண்டுக்கான முன்னணி கிரிக்கெட் வீரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
விஸ்டென் கிரிக்கெட் வீரர்களின் பஞ்சாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்படும் வருடாந்திர கிரிக்கெட் வீரர் விருதே விஸ்டெனின் உலக முன்னணி கிரிக்கெட் வீரர் என்ற பெருமை ஆகும்.
2004 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இவ்விருது, முந்தைய ஆண்டில் உலகின் எந்தவொரு இடத்திலும் சிறந்த செயல்பாட்டைக் கொண்ட வீரர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்படுகிறது.