ஒரு மிகப்பெரிய விமானத்தினை நீண்ட தூர விமானப் பயணத்தில் இயக்குவதற்கான நிலைத் தன்மை மிக்க ஒரு விமான எரிபொருளை (SAF) பயன்படுத்திய முதல் இந்திய விமான நிறுவனம் என்ற பெருமையை விஸ்தாரா பெற்றுள்ளது.
விஸ்தாரா என்பது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் டாடா குழுமத்தின் கூட்டு நிறுவனம் ஆகும்.
தென் கரோலினாவின் சார்லஸ்டன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்குச் சிறப்பு விமானம் இயக்கப்பட்டது.
நிலைத்தன்மை மிக்க விமான எரிபொருள் என்பது வழக்கமான ஜெட் எரிபொருளுக்கு ஒரு தூய்மையான மாற்றாக அமையும்.
இது எரிபொருளின் பயன்பாட்டுச் சுழற்சி முழுவதுமான கார்பன் வெளியேற்றத்தை 80 சதவீதம் வரை குறைக்கக் கூடியதாகும்.