TNPSC Thervupettagam

விஸ்வகமல் அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் INC

September 30 , 2023 423 days 267 0
  • சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயில் குளத்துக்கு எதிரே ‘விஸ்வகமல்’ என்ற அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது.
  • இது 1885 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸ் உருவாவதற்கு வழி வகுத்த, ஒரு புதிய சகாப்தத்தினை உருவாக்க வழி வகுத்த கூட்டம் நடைபெற்ற இடம் ஆகும்.
  • 1884 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அடையாறில் நடந்த பிரம்ம ஞான சபையின் வருடாந்திர மாநாட்டிற்குப் பிறகு, நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 17 பேர் இந்த இடத்தில் சந்தித்தனர்.
  • எனினும் ‘காங்கிரஸின் தந்தை’ எனப்படும் ஆலன் ஆக்டேவியன் ஹியூம் இதில் பங்கேற்க வில்லை.
  • ஆனால் "இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டம் ஆனது 1884 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டது" என சில கூற்றுக்கள் உள்ளன.
  • ஆனால், 1885 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், 1884 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற கூட்டத்தைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லாமல், அடுத்து வர இருந்த கிறிஸ்துமஸில் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்தப் பிரதிநிதிகள் கூட்டத்தினை நடத்த முடிவு செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்