TNPSC Thervupettagam

விஸ்வகர்மா திட்டம்

September 21 , 2023 305 days 305 0
  • பாரம்பரிய கைவினைக் கலைஞர்களின் நலனுக்கான விஸ்வகர்மா திட்டத்தினைப் பிரதமர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
  • இத்திட்டத்தின் கீழ், அரசு (வங்கி) எந்தவொரு உத்தரவாதமும் இல்லாமல் 3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும்.
  • இத்திட்டத்தின் கீழ் வட்டி விகிதமும் மிகக் குறைவாக வழங்கப்படும் என்பதும் உறுதி அளிக்கப் பட்டுள்ளது.
  • தொடக்கத்தில் 1 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும் என அரசு முடிவு செய்துள்ளது.
  • அதைத் திருப்பிச் செலுத்தியவுடன், விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் கடன் பெறும் நபர்கள்ளுக்கு அரசாங்கம் கூடுதலாக 2 லட்சம் ரூபாய் கடனாக வழங்கும்.
  • இந்தியாவின் கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கைவினைக் கலைஞர்களுக்கு இத்திட்டம் உதவி வழங்கும்.
  • தொடக்கத்தில், இத்திட்டத்தின் கீழ் 18 பாரம்பரிய வர்த்தகங்களுக்குக் கடன் பெறும் வகையில் இதனுள் உள்ளடக்கப்படும்.
  • இந்தத் திட்டத்தின் பயனாளிகளுக்கு PM விஸ்வகர்மா சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை மூலம் அங்கீகாரம் வழங்கப் படும் என்பதோடு அவர்கள் அடிப்படை மற்றும் மேம்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சியினையும் பெறுவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்