மெய்நிகர் உண்மைத் தோற்றம், அனிமேஷன், திரைப்படக் காட்சியமைப்பு மற்றும் காணொளி விளையாட்டுகள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தும் நிகழ்வான வீடியோசிட்டா 2018 (Videocittà 2018) என்பதில் இந்தியாவும் ஒரு பங்குதாரர் நாடாகும்.
இது ரோம் திரைப்பட விழாவாலும், மெர்கதோ இண்டர்நேஷனலே டெல் ஆடியோவிசிவோ (Mercato Internazionale dell'Audiovisivo/ MIA - the International Audio-Visual Market) என்ற அமைப்பாலும் இணைந்து நடத்தப்பட்டது.
ரோமில் நடந்த 2018 வீடியோசிட்டாவில் இந்தியாவின் பங்கேற்பானது மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு அந்த அமைச்சகத்தின் சார்பாக பிக்கி (FICCI - Federation of Indian Chambers of Commerce and Industry) என்ற அமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்டது.