TNPSC Thervupettagam

வீடுகளுக்கேச் சென்று நிதி வழங்குதல்

April 11 , 2020 1746 days 799 0
  • ஊரடங்கின்போது வீட்டை விட்டு வெளியேச் செல்ல முடியாத வாடிக்கையாளர்களுக்காக, இந்திய அஞ்சலகப் பணவழங்கீட்டு வங்கியானது (IPPB - Indian Postal Payments Bank) ஆதாரின் உதவியுடன் “வீடுகளுக்கேச் சென்று நிதி வழங்குதல்” எனும் திட்டத்தை தொடங்கியுள்ளது. 
  • இந்த முயற்சியின் கீழ் ஒருவர் ரூ.10000 வரையிலான பணத்தைப் பெற முடியும்.
  • இந்த முயற்சியின் கீழ் ஒருவர் ஆதாரால் செயல்படுத்தப்பட்ட பணவழங்கீட்டு முறையின் மூலம் ஆதாருடன் இணைக்கப்பட்ட எந்தவொரு வங்கிக் கணக்கிலிருந்தும் அவரது பணத்தைப் பெற முடியும்.
  • வாடிக்கையாளரின் அடையாளத்தை உறுதி செய்வதற்காக தபால் அலுவலரிடம் உள்ள பயோமெட்ரிக் (உயிரித் தரவு) சாதனத்தில் வாடிக்கையாளர் தனது கை விரல்களை வைத்து உறுதி செய்ய வேண்டும்.
  • IPPB என்பது மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள அஞ்சல் துறையின் கீழ் செயல்படுகின்ற முழுவதும் அரசாங்கத்தால் நிர்வகிக்கப் படும் ஒரு பொதுத் துறை வங்கியாகும்.
  • 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 அன்று இந்திய அஞ்சல் துறையானது பணவழங்கீட்டு வங்கியைச் செயல்படுத்துவதற்காக இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து அனுமதியைப் பெற்றது.
  • IPPBன் இந்தத் தலைமைத் திட்டமானது 2017 ஆம் ஆண்டு ஜனவரி 30 அன்று ராய்ப்பூர் மற்றும் ராஞ்சியில் தொடங்கப்பட்டது.
  • இது 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஆதாரால் செயல்படுத்தப்பட்ட பணவழங்கீட்டு முறைச் சேவையைத் தொடங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்