இந்தியத் தேர்தல் ஆணையமானது மக்களவை தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக, மாற்றுத் திறனாளிகள் (PwD) மற்றும் 85 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு ‘வீட்டிலிருந்த படியே வாக்களிக்கும்’ ஒரு வசதியை விரிவுபடுத்தி உள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் சுமார் 85 லட்சத்துக்கும் அதிகமான முதியோர்களும், 88.4 லட்சத்துக்கும் அதிகமான மாற்றுத் திறனாளிகளும் தபால் வாக்கு மூலம் வாக்களிக்க முடியும்.
படிவம் 12D ஆனது வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க உதவும்.
2024 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி நிலவரப் படி, நாட்டில் 85 வயதிற்கு மேற்பட்ட 81,87,999 முதியோர்களும், 100 வயதிற்கு மேற்பட்ட 2,18,442 வாக்காளர்களும் உள்ளனர்.