TNPSC Thervupettagam

வீட்டிலேயே பிரசவம் மேற்கொள்ளும் நடைமுறை

November 26 , 2024 48 days 111 0
  • தம்பதிகள் வீட்டிலேயேப் பிரசவம் பார்த்துக் கொள்ளும் மருத்துவ நடைமுறையினை "தேர்ந்தெடுக்கும்" நிகழ்வுகளைக் கையாள்வதற்கான உயர்மட்ட விவாதத்தை மேற் கொள்வதற்கு தமிழ்நாடு சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.
  • 1939 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டத்தில் திருத்தங்களை மேற் கொள்வதையும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக என்று குற்றவியல் சட்டங்களின் விதிகளைப் பயன்படுத்துமாறும் வல்லுநர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
  • பல தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் நீடித்த முயற்சிகள் மூலம் தமிழ்நாடு மாநிலம் 99.9% மருத்துவமனையில் பிரசவங்கள் நடைபெறும் நிலையினை அடைந்து உள்ளது.
  • நிதி ஆயோக் அமைப்பின் 2023-2024 ஆம் ஆண்டு நிலையான மேம்பாட்டு இலக்கு- இந்தியா குறியீடானது, தமிழகத்தின் மருத்துவமனையில் நடைபெறும் பிரசவங்களின் சதவீதத்தை 99.98 ஆகக் குறிப்பிடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்