TNPSC Thervupettagam

வீட்டு உபயோக நுகர்வுக் கணக்கெடுப்பு – மாநிலங்கள் தர வரிசை

March 3 , 2024 270 days 277 0
  • 2022-23 ஆம் ஆண்டு மாதாந்திர தனிநபர் நுகர்வுச் செலவினம் (MPCE) ஆனது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
  • சிக்கிம் மாநிலமானது, கிராமப்புற மற்றும் நகர்ப்புறக் குடும்பங்களில் அதிக செலவினங்களைப் பதிவு செய்துள்ள அதே சமயம் சத்தீஸ்கர் மாநிலமானது இரண்டு அளவுருக்களிலும் மிகக் குறைந்த மதிப்பினைப் பெற்றுள்ளது.
  • சிக்கிம் மாநிலமானது கிராமப்புறங்களில் சராசரியாக 7,731 ரூபாய் மற்றும் நகர்ப் புறங்களில் 12,105 ரூபாய் மாதாந்திர தனிநபர் நுகர்வுச் செலவினம் என்ற அளவில் முதல் இடத்தில் பதிவாகியுள்ளது.
  • ஜார்க்கண்ட் மாநிலம் ஆனது சராசரியாக 2,763 ரூபாய் என்ற மாதாந்திர தனிநபர் நுகர்வுச் செலவினத்துடன் சத்தீஸ்கர் மாநிலத்தினை முந்தியுள்ள நிலையில், அதற்கு முந்தைய இடத்தில் 2,950 ரூபாய் என்ற மாதாந்திர தனிநபர் நுகர்வுச் செலவினத்துடன் ஒடிசா உள்ளது.
  • நகர்ப்புற நுகர்வில், 4,768 ரூபாய் என்ற மாதாந்திர தனிநபர் நுகர்வுச் செலவினத்துடன் பீகார் இரண்டாவது இடத்தையும், 4,880 ரூபாய் என்ற மாதாந்திர தனிநபர் நுகர்வுச் செலவினத்துடன் மணிப்பூர் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.
  • மாநிலங்களில், கிராமப்புற மற்றும் நகர்ப்புற நுகர்வு ஆகியவற்றில் முறையே சராசரியாக 7,367 ரூபாய் மற்றும் 8,734 ரூபாய் என்ற மாதாந்திர தனிநபர் நுகர்வுச் செலவினத்துடன் கோவா மாநிலமானது இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.
  • கிராமப்புறக் குடும்பங்களின் செலவினங்களில் 5,924 ரூபாய் என்ற மதிப்புடன் கேரளா மூன்றாவது இடத்தில் உள்ள நிலையில் மேலும் நகர்ப்புறங்கள் பிரிவில் அருணாச்சலப் பிரதேசம் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
  • மாநிலங்களுக்கிடையேயான சராசரி மாதாந்திர தனிநபர் நுகர்வுச் செலவினத்தில் உள்ள கிராமப்புற-நகர்ப்புற வேறுபாடாடு ஆனது மேகாலயாவில் (83 சதவீதம்) அதிக அளவிலும், அதைத் தொடர்ந்து சத்தீஸ்கரில் (82 சதவீதம்) மிக அதிக அளவில் பதிவாகி இருப்பதாகவும் கண்டறியப்பட்டது.
  • ஒன்றியப் பிரதேசங்களில், சண்டிகரில் மாதாந்திர தனிநபர் நுகர்வுச் செலவினம் அதிகமாக உள்ளது (கிராமப்புறத்தில் சுமார் 7,467 ரூபாய் மற்றும் நகர்ப்புறத்தில் 12,575 ரூபாய்) என்பதோடு, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களின் செலவினங்கள் முறையே லடாக் (ரூ. 4,035) மற்றும் லட்சத்தீவு (ரூ. 5,475) ஆகியவற்றில் குறைந்தபட்ச செலவினம் என்ற வகையில் பதிவாகியுள்ளது.
  • 21 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் பதிவான சராசரி மாதாந்திர தனி நபர் நுகர்வுச் செலவினம் ஆனது 2022-23 ஆம் ஆண்டின் ரூ.6,459 என்ற அளவில் தேசிய சராசரியை விட அதிகமாக இருந்தது.
  • ஜம்மு & காஷ்மீர், மேற்கு வங்காளம் மற்றும் உத்தரப் பிரதேசம், அகில இந்திய எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது குறைந்த நுகர்வு அளவைக் கொண்டிருந்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்