புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (NSSO) ஆனது வீட்டு உபயோகச் செலவின (குடும்ப நுகர்விற்கான செலவினங்கள்) கணக்கெடுப்பை (HCES) நடத்தியது.
தனிநபர் மாதாந்திர குடும்பச் செலவினமானது 2011-12 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2022-23 ஆம் ஆண்டில் இருமடங்காக அதிகரித்துள்ளது.
நகர்ப்புறங்களில் 2011-12 ஆம் ஆண்டில் தற்போதைய (உண்மை) அசல் விலையில் (தோராயமாக்கப் படாத) 2,630 ரூபாயாக இருந்த சராசரி தனிநபர் மாதாந்திர குடும்பச் செலவினமானது (MPCE) 2022-23 ஆம் ஆண்டில் இருமடங்காக உயர்ந்து 6,459 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதே போல் கிராமப்புறங்களில், உண்மை விலையில் 1,430 ஆக இருந்த சராசரி தனி நபர் மாதாந்திரக் குடும்பச் செலவினமானது 3,773 ஆக உயர்ந்துள்ளது.
நகர்ப்புறங்களில் 2011-12 ஆம் ஆண்டின் உண்மை விலையில் (தோராயமாக்கப்படாத), 2011-12 ஆம் ஆண்டில் 2,630 ரூபாயாக இருந்த சராசரி MPCE ஆனது 2022-23 ஆம் ஆண்டில் 3,510 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே போல், கிராமப்புறங்களில் 2011-12 ஆம் ஆண்டின் உண்மை விலையில் 1,430 ஆக இருந்த சராசரி MPCE ஆனது 2,008 ஆக உயர்ந்துள்ளது.