TNPSC Thervupettagam

வீட்டு உபயோகத்திற்கான வெண்மை நிறத்தில் அமைந்த மின்சார சாதனப் பொருட்களுக்கான உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டம்

January 25 , 2025 3 days 35 0
  • மூன்றாவது சுற்றில் 3,516 கோடி ரூபாய் முதலீட்டுடன் வெண்ணிற வீட்டு உபயோக மின்சாதனப் பொருட்களுக்கான (AC மற்றும் LED விளக்குகள்) உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் 24 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
  • 18 புதிய நிறுவனங்கள் ஆனது 2,299 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளுக்கான உறுதிப்பாடுகளை வழங்கியுள்ளன என்பதோடு ஏற்கனவே உள்ள 6 PLI பயனாளி நிறுவனங்கள் 1,217 கோடி ரூபாய் கூடுதல் முதலீட்டினை மேற்கொண்டனர்.
  • வெண்ணிற வீட்டு உபயோக மின்சாதனத் தொழில்துறைப் பொருட்களுக்கான PLI திட்டத்தின் கீழ் மொத்தம் 84 நிறுவனங்கள் 10,478 கோடி ரூபாய் முதலீடுகளை மேற் கொள்ள உள்ளன.
  • வீட்டு உபயோக மின்சாதனப் பொருட்களுக்கான இந்த PLI திட்டம் ஆனது, இந்தியாவில் குளிர்பதனச் சாதனங்கள் மற்றும் LED விளக்குகள் தொழில்துறைக்கு ஒரு வலுவானச் சுற்றுச்சூழல் அமைப்பினை உருவாக்குவதற்காகவும், இந்தியாவினை உலகளாவிய விநியோகச் சங்கிலிகளின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றுவதற்காகவும் வேண்டி வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • இந்தத் திட்டமானது அடிப்படை ஆண்டு மற்றும் ஓராண்டு கால காப்புக் காலத்திற்குப் பிறகு, ஐந்து (5) ஆண்டுகளுக்கு உயரும் விற்பனையின் ஒரு அடிப்படையில் குறைப்பு அடிப்படையில் 6% முதல் 4% வரை ஊக்கத் தொகையை வழங்குகிறது.
  • வெண்ணிற தொழில்துறைப் பொருட்கள் என்பது வழக்கமாக அடுப்புகள், குளிர் சாதனப் பெட்டிகள், உறைவிப்பான்கள் மற்றும் சலவை இயந்திரங்கள் போன்ற பெரிய வீட்டு உபகரணங்களைக் குறிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்