வீட்டு உபயோகத்திற்கான வெண்மை நிறத்தில் அமைந்த மின்சார சாதனப் பொருட்களுக்கான உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டம்
January 25 , 2025 33 days 63 0
மூன்றாவது சுற்றில் 3,516 கோடி ரூபாய் முதலீட்டுடன் வெண்ணிற வீட்டு உபயோக மின்சாதனப் பொருட்களுக்கான (AC மற்றும் LED விளக்குகள்) உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் 24 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
18 புதிய நிறுவனங்கள் ஆனது 2,299 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளுக்கான உறுதிப்பாடுகளை வழங்கியுள்ளன என்பதோடு ஏற்கனவே உள்ள 6 PLI பயனாளி நிறுவனங்கள் 1,217 கோடி ரூபாய் கூடுதல் முதலீட்டினை மேற்கொண்டனர்.
வெண்ணிற வீட்டு உபயோக மின்சாதனத் தொழில்துறைப் பொருட்களுக்கான PLI திட்டத்தின் கீழ் மொத்தம் 84 நிறுவனங்கள் 10,478 கோடி ரூபாய் முதலீடுகளை மேற் கொள்ள உள்ளன.
வீட்டு உபயோக மின்சாதனப் பொருட்களுக்கான இந்த PLI திட்டம் ஆனது, இந்தியாவில் குளிர்பதனச் சாதனங்கள் மற்றும் LED விளக்குகள் தொழில்துறைக்கு ஒரு வலுவானச் சுற்றுச்சூழல் அமைப்பினை உருவாக்குவதற்காகவும், இந்தியாவினை உலகளாவிய விநியோகச் சங்கிலிகளின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றுவதற்காகவும் வேண்டி வடிவமைக்கப் பட்டுள்ளது.
இந்தத் திட்டமானது அடிப்படை ஆண்டு மற்றும் ஓராண்டு கால காப்புக் காலத்திற்குப் பிறகு, ஐந்து (5) ஆண்டுகளுக்கு உயரும் விற்பனையின் ஒரு அடிப்படையில் குறைப்பு அடிப்படையில் 6% முதல் 4% வரை ஊக்கத் தொகையை வழங்குகிறது.
வெண்ணிற தொழில்துறைப் பொருட்கள் என்பது வழக்கமாக அடுப்புகள், குளிர் சாதனப் பெட்டிகள், உறைவிப்பான்கள் மற்றும் சலவை இயந்திரங்கள் போன்ற பெரிய வீட்டு உபகரணங்களைக் குறிக்கின்றன.