பணவீக்கத்தின் தாக்கத்தினை ஈடுசெய்த பிறகு, 2022-23 ஆம் ஆண்டில் கிராமப்புற இந்தியாவில் மாதாந்திர தனிநபர் வீட்டு நுகர்வுச் செலவினம் சுமார் 40 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
முழுமையான அளவில், 2011-12 ஆம் ஆண்டில் 1,430 ரூபாயாக இருந்த நாட்டின் கிராமப் புறங்களில் மாதாந்திரத் தனிநபர் நுகர்வுச் செலவினம் ஆனது 2022-23 ஆம் ஆண்டில் 2,008 ரூபாயாக உயர்ந்தது.
2011-12 ஆம் ஆண்டில் பணவீக்கத்தின் தாக்கத்தினை ஈடு செய்த பிறகு, 2022-23 ஆம் ஆண்டில் 2,360 ரூபாயாக இருந்த தனிநபர் குடும்ப நுகர்வுச் செலவினம் ஆனது 3,510 ஆக உயர்ந்துள்ளதால், நகர்ப்புற இந்தியாவிலும் சுமார் 33 சதவீதம் வரை வலுவான அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
பணவீக்கத்தின் மூலமான தாக்கத்தினை நீக்காமல், 2022-23 ஆம் ஆண்டில் நகர்ப்புறக் குடும்பங்களுக்கான செலவினம் சுமார் 6,459 ரூபாயாகவும், அதுவே கிராமப்புறக் குடும்பங்களுக்கான செலவினம் சுமார் 3,773 ரூபாயாகவும் இருந்தது.
இது 2011-12 ஆம் ஆண்டில் முறையே 2,630 ரூபாய் மற்றும் 1,430 ரூபாயாக இருந்தது.
2022-23 ஆம் ஆண்டில், சராசரி கிராமப்புறக் குடும்பங்களின் நுகர்வில் உணவிற்கான செலவினமானது சுமார் 46 சதவீதமாக இருந்தது.
நகர்ப்புறக் குடும்பங்கள் ஆனது தங்கள் மாதாந்திரத் தனிநபர் நுகர்வில் சுமார் 39 சதவீதத்தினை உணவிற்காக ஒதுக்கியுள்ளனர்.